Print this page

முஸ்லீம்கள் பிரச்சினை. குடி அரசு - செய்தி விளக்கம் - 30.08.1931 

Rate this item
(0 votes)

தனித்தொகுதிக்கு ஜனாப் ஜமால் மகமது ஆதரவு 

சென்னையில் பிரபல வியாபாரியும், இந்திய தோல் அரசரும் (India Leather King) முஸ்லீம் சமூக பிரமுகருமான திரு. ஜமால் மகமது சாயபு அவர்கள் தலைச்சேரி மாப்பிள்ளை முஸ்லீம்கள் மகாநாட்டில் தலைமை வகித்துப் பேசியதில் “ஸ்தானங்கள் ஒதுக்கி வைக்கப்பட்ட கூட்டுத் தொகுதி நல்லதானாலும் பல காரணங்களால் சென்னை முஸ்லீம்கள் செய்துள்ள தனித்தொகுதித் திட்டத்தைத் தான் ஆதரிப்பதாகவும் எல்லா முஸ்லீம்களும் ஆதரிக்கவேண்டுமென்றும் சொல்லி இருக்கிறார். 

ஆகவே, தனித்தொகுதிக்கு எந்த முஸ்லீம் பிரமுகர் விரோதமாக இருக்கின்றார் என்பதை விளக்க வேண்டியது தேசீய முஸ்லீம்கள் என்பவர்களின் கடமையாகவும் தேசீய இந்துக்கள் என்பவர்களின் கடமையுமாகும். 

குடி அரசு - செய்தி விளக்கம் - 30.08.1931

Read 97 times